மன அழுத்தத்திற்கு ஆளாகமால் பார்த்துக்கோங்க!! பெற்றோர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!!

 
அன்பில் மகேஷ்

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் , பிற்பகல் 2 மணிக்கு  11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளும்  வெளியானது. இதில் 10ம் வகுப்பு தேர்வில்  8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம்வகுப்பு தேர்ச்சி சதவீதம் 91.39 ஆகும்.  இதில் மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66 ஆகவும்,  மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16% ஆக உள்ளது. அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 86.99 சதவீதமும், மாணவிகள் 94.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தேர்வு
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேர்ச்சி பெறாத பாடங்களை திரும்ப எழுதி அடுத்த வகுப்பிற்கு செல்லலாம். ஆனால் காலை முதலே தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம். தோல்வியடைந்தவர்கள் விரைவில் துணை தேர்வுகளை எழுதி நடப்பாண்டே உயர்கல்விக்கு செல்ல முடியும்.  

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

35 மதிப்பெண்கள் பெற்றாலும் நம் பிள்ளைதான், 100 மதிப்பெண்கள் பெற்றாலும் நம் பிள்ளை தான்.எனவே பெற்றோர்கள் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா பிள்ளைகளும் நமது பிள்ளைகள்தான் . எனவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். ஜூன் மாதம் துணைத் தேர்வு நடைபெறும். தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களையும் துணை தேர்வில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.  கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில்  அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து உயர்கல்விக்கு ஏற்பாடு செய்வோம். வடமாவட்டங்களின் கல்வித் தரத்தை உயர்த்த தொடர்ந்து பல்வேறு முயற்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  80,000க்கும் மேலான மாணவர்கள் அரசு பள்ளியில் தற்போது சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம்” எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web