கல்வி சுகமாக இருக்க வேண்டுமே தவிர சுமையாக இருக்க கூடாது... நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அட்ராசிட்டி!

மத்திய அரசு தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோமா, எதிர்க்கிறோமா ? என்பதில் நாம் தெளிவான முடிவெடுக்க வேண்டும். இல்லம் தேடி கல்வியை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.
ஜவகர் நேசன் கல்வி திட்டத்தை வகுக்கும் குழுவில் இருந்து வெளியேறியது புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் தான் வெளியேறி இருக்கிறார். மிகப்பெரிய கல்வி ஆய்வாளர்கள் வல்லுநர்கள் அனைவருமே, இது நம்முடைய குழந்தைகளுக்கு எழுதி வைக்கிற மரண சாசனம் என்று தான் கூறுகிறார்கள். கல்வி சுகமாக இருக்க வேண்டுமே தவிர சுமையாக இருக்கக் கூடாது. எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு சுமை நான் பிறந்த நாட்டில் , நான் விரும்பிய கல்வியை கற்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. மருத்துவத்தை எடுத்துக் கொண்டாலும் முதுகலை எழுதுவதற்கு கூட ஒரு நீட் பரிட்சை எழுத வேண்டி இருக்கிறது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்காது. அனைத்திற்கும் தேர்வு வைக்கிறவர்கள், நாட்டையே நிர்வகிக்கிற பொறுப்பில் இருக்கக் கூடிய தலைவர்கள் என்ன தேர்வு எழுதுகிறார்கள். எந்த தகுதியுமே இல்லாதவர் இந்த நாட்டை ஆளும் தகுதியை பெற்றிட முடியும். ஆனால் ஒரு வழக்கறிஞர் நீதிபதி ஆவதற்கு தேர்வு எழுத வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்றாலும் தேர்வு எழுத வேண்டும். மாவட்ட ஆட்சிப்பணி இந்திய குடிமைப்பணி என எதை எடுத்துக் கொண்டாலும் தேர்வு எழுதி தான் வரவேண்டும். கல்வியிலேயே தலைசிறந்த நாடாக இருக்கக் கூடிய தென்கொரியா எட்டு வயதில் தான் பிள்ளைகளை முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள். இங்கு எட்டு வயதில் இருக்கக் கூடிய பிள்ளைகள் பொது தேர்வு எழுதுகிறார்கள். அந்த இடத்தில் தோற்று விட்டால் கல்வி என்பது அந்தப் பிஞ்சு நெஞ்சில் நஞ்சாக மாறிவிடாதா?. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வந்த மாணவிகளே நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி இருக்கிற சமூக சூழலில், தோல்வியை வெற்றியின் தாய் என கற்பித்து கொடுக்காமல், தோல்வி அடைந்தால் அனைத்தும் முடிந்து விடும் என்பதையே இந்த சமூகம் கட்டமைக்கிறது. கல்வியை வியாபாரமாகி விட்டு சமகல்வி சம உரிமை என்று பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏற்கனவே இங்கு ஏழைக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு என்று ஒரு கல்வி தான் இருக்கிறது கல்வி எங்கு இங்கு சமமாக உள்ளது, பணம் இருந்தால் நல்ல கல்வியை பெற்றுக் கொள்ள முடியும். பணம் இருந்தால் நீ பயிற்சி மையங்களில் பயிற்சியில் சேர முடியும். எத்தனை குழந்தைகள் பணம் இல்லாமல் இடைநிறுத்தம் செய்து செல்கிறார்கள் என்று ஆய்வுகள் இருக்கிறது, நகர்ப்புறங்களில் இருக்கக் கூடிய கல்வி கட்டமைப்பு சிற்றூர்களில் இருக்கிறதா ? இந்த நாட்டில் வரிகள் ஒன்றாக உள்ளது ஆனால் வாழ்க்கை தரம் ஒன்றாக உள்ளதா ? அமைச்சர் பெருமக்கள் பயிலுகிற கல்வியும், சாதாரண மக்கள் பயில்கிற கல்வியும் ஒன்றாக உள்ளதா ? இந்த நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் பெரும் மருத்துவமும், சாதாரண ஏழை மக்கள் பெரும் மருத்துவமும் ஒன்றாக உள்ளதா ? அனைத்தையும் இங்கு வியாபார பொருளாகிவிட்டு வெற்று வார்த்தைகளை வைத்து சம கல்வி என மக்களை ஏமாற்றுகிறார்கள். பெரிய பள்ளிக் கூடங்களில் படித்து வருபவர்களும், பெற்றோர்களில் இருந்து படித்து வரும் மாணவர்களும் ஒரே இடத்தில் தேர்வுக்கு போட்டி போடுவது என்பது சாத்தியமான ஒன்றா? என்று கூறினார்.
இவர்கள் முதலில் சமச்சீர் கல்வி என்று ஒன்றை கொண்டு வந்தார்கள், அதற்கு பெயர் சமச்சீர் பாடத் திட்டம் சமச்சீர் கல்வி கிடையாது. கிராமங்களில் வைத்து இருக்கும் மாணவர்களின் புத்தகமும் நகர்ப்புற மாணவர்கள் வைத்து இருக்கும் புத்தகமும் ஒன்றுதான், ஆனால் கல்வி அங்கு சமச்சீராக இல்லை. நகர்ப்புறங்களில் படிப்பவனுக்கு குளிரூட்டப்பட்ட அறை, கழிப்பட வசதி விளையாட்டு திடல் போன்றவைகள் எல்லாம் மேல் திட்டில் உள்ளது. ஆனால் கிராமப்புறத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த வசதிகள் எல்லாம் இருக்கிறதா?..
சிற்றூர்களில் எல்லாம் மூன்றாம் தர ஆசிரியர்களை தான் பணி நியமனமே செய்கிறீர்கள். முதல் தர ஆசிரியர்களை நகர்ப்புற பள்ளிக்கூடங்களில் பணியமர்த்துகிறீர்கள். அவர்களெல்லாம் தனியார் பள்ளியை நோக்கி சொல்கிறார்கள் காரணம் அங்கு அவர்களுக்கு சம்பளமும் அதிகம் வசதியும் அதிகம் என்று கூறினார்.
இந்த கல்வி முறையில் அதிகபட்சம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் போய் பணி செய்வதை தவிர வேறு என்ன இருக்கிறது. ஒரு மாணவனின் கனவு, வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்பதில் இருக்கிறதே தவிர, இங்கு இந்த நாட்டில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி எல்லாம் கனவு இல்லை. ஆனால் மற்ற உலக நாடுகளில், எந்த நாடு இந்திய கனவை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் படிக்கும் ஒரு மாணவனுக்கு இந்திய நாட்டு கனவு இருக்கிறதா?.. ஆனால் இந்த நாட்டில் படிக்கும் அனைவருக்குமே அயல் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதுதான் இங்கு கல்வியின் இலக்காகவும் கற்பிக்கப்படுகிறது. அதைத் தான் அவர்கள் சமகல்வி சமச்சீர் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அறிவார்ந்த மருத்துவர் பொறியாளர் என அனைவரையும் தயார் செய்து வேறு நாட்டில் இறக்கிவிட்டு விடுகிறீர்கள். சிறந்த மருத்துவம் அமெரிக்காவிற்கு சென்று பார்க்கப்படுகிறது.. ஆனால் நம் நாட்டில் இருந்து சிறந்த மருத்துவத்திற்காக முதல்வரோ பிரதமரோ, லண்டனுக்கு செல்கிறார்கள். விளையாட்டு வீரர் யுவராஜுக்கு புற்றுநோய் இருந்தது, இந்திரா காந்தி அம்மையாருக்கு புற்றுநோய் இருந்தது இவர்கள் எல்லாம் வெளியூருக்கு சென்று வைத்தியம் பார்த்து வந்துவிட்டார்கள்.. ஆனால் இங்கு என் தாய்க்கு புற்றுநோய் என்றால் நான் எங்கு சென்று வைத்தியம் பார்க்க முடியும். வசதி இருக்கிறவன் பெரிய மருத்துவமனைகளில் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும், வசதி இல்லாத ஊர் புறம் இருக்கக் கூடியவர்கள் பாடகட்டி சுடுகாட்டில் தான் படுத்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!