முட்டை விலை தொடர்ந்து சரிவு... அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி!

 
முட்டை கோழி

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி தொடக்கத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 6.35 வரை உயர்ந்து வரலாறு காணாத சாதனை படைத்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முட்டை விலை சுமார் 60 காசுகள் வரை குறைந்துள்ளது. இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் ஒரு முட்டையின் விலை அதன் அளவைப் பொறுத்து ரூ.5.50 முதல் ரூ.6.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை

தற்போது தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா நெருங்கி வருவதால், பலரும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அசைவ உணவுகள் மற்றும் முட்டை நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருகப் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால், வழக்கமாக ஜனவரி மாத இறுதியில் முட்டைக்கான தேவை உள்நாட்டில் குறையத் தொடங்கும்.

முட்டை விலை திடீர் உயர்வு

முட்டை விலை ரூ. 6-க்கு மேல் உயர்ந்தபோது, சர்வதேச சந்தையில் துருக்கி போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாமல் இந்தியாவின் முட்டை ஏற்றுமதி சற்றே பாதிப்படைந்தது. இது தேக்கத்தை உருவாக்கி விலையைக் குறைக்க வழிவகுத்தது. குளிர்காலக் கடும் குளிரால் பாதிக்கப்பட்ட முட்டை உற்பத்தி, தற்போது காலநிலை சற்று சீராகி வருவதால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!