நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைவு - புதிய விலை நிலவரம் இதோ!
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த முட்டை விலை, இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நேற்று நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ஒரு முட்டையின் கொள்முதல் விலை 640 காசுகள் (₹6.40) என்ற புதிய உச்சத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் விலையை 20 காசுகள் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் கொள்முதல் விலை தற்போது 620 காசுகளாக (₹6.20) குறைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் முடிவடைந்த நிலையில், முட்டைக்கான தேவை சந்தையில் சற்று குறைந்துள்ளது. தேக்கநிலையைத் தவிர்த்து விற்பனையை அதிகரிக்கவும், நுகர்வோரைக் கவரவும் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
முட்டை விலை குறைந்தாலும், கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கறிக்கோழி (1 கிலோ): ₹142 முட்டைக்கோழி (1 கிலோ): ₹90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
