நாமக்கலில் முட்டை விலை சரிவு… 500 காசுகளாக குறைவு!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் முட்டை விலை 530 காசுகளாக குறைந்தது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மேலும் 30 காசுகள் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை தற்போது 500 காசுகளாக சரிவடைந்துள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு குறைந்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி விலைகளில் மாற்றம் இல்லை. கறிக்கோழி கிலோ ரூ.152-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.82-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் கூறினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
