முட்டை விலை சரிவு.... இல்லத்தரசிகள் வரவேற்பு!
நாமக்கல்லில் ஒரு முட்டையின் விலை ரூ.6 ஆகவும், சென்னையில் ரூ.6.70 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.6.20 லிருந்து 20 காசுகள் குறைக்கப்பட்டு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முட்டை விலை 40 காசுகள் வரை குறைந்துள்ளது. முட்டை நுகர்வு மற்றும் விற்பனை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் முட்டை உற்பத்தி மையமாக நாமக்கல் மாவட்டம் விளங்குகிறது. இங்கு 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நிலையில், அதில் 40 சதவீதம் கேரளாவுக்கும், தினசரி 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
