முட்டை விலை கடும் சரிவு... இல்லத்தரசிகள் உற்சாகம்!
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, தினமும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அதிக அளவில் முட்டை ஏற்றுமதி நடைபெறும் பகுதி நாமக்கல்தான் என கூறப்படுகிறது.

சவூதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஈரான் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தற்போது முற்றிலும் தடைப்பட்டுள்ளது. எந்த கப்பலும் புறப்படவில்லை என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் நாமக்கலில் இருந்து 77 கண்டெய்னர்களில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிலை காரணமாக கப்பல்கள் தாமதமாகி, ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை ஏற்றுமதி மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
