8வது முறை கர்ப்பம்.. குடும்ப கட்டுப்பாடு செய்ய சொன்னதால் மருத்துவமனையில் இருந்து இளம்பெண் எஸ்கேப்!

 
அமுதா

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மேல்ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரசாந்த். இவரது மனைவி அமுதா (29). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் இருந்ததில் 2 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர். குடும்ப வறுமையால் 100 நாள் வேலைக்குச் சென்று 5 குழந்தைகளையும் அமுதா கவனித்து வந்தார். இந்த நிலையில் அமுதா 8வது முறையாக கர்ப்பமானார்.

கர்ப்பிணி

இதையடுத்து, அருகில் உள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அமுதாவுக்கு கடந்த வாரம் நிறைவடைந்ததால், வேலூர் காக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 8வது பிரசவம் என்பதை அறிந்த டாக்டர்கள் அமுதாவை பிரசவத்திற்கு பின் ``குடும்பக்கட்டுப்பாடு' செய்ய அறிவுறுத்தினர். குடும்ப கட்டுப்பாடு செய்ய விரும்பாத அமுதாவும், அவரது கணவரும் கடந்த 4ம் தேதி யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றனர்.

பிரசவ வார்டில் அமுதா இல்லாததைக் கண்ட டாக்டர்கள் உடனடியாக மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், செவிலியர்கள் விஜயகுமாரி, கலைவாணி, சுகாதார ஆய்வாளர் அஜித் ஆகியோர் கொண்ட குழுவினர் மேல்ஆலாங்குப்பம் கிராமத்துக்கு விரைந்தனர். ``குடும்பச் சூழல்'', ``நிதி நிலை'' என்று குறிப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து பிரசவத்துக்கு அனுமதித்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web