கலக்கத்தில் இளங்கோவன்.. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஒருங்கிணைகிறார்களா? ஜகா வாங்கிய பாஜக!

 
எடப்பாடி ஓபிஎஸ்

1972ல் திமுகவை தீய சக்தி எனக் கூறி எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார். ஜெயலலிதாவும் அதனையே கூறினார். ஆனால் இந்த திமுக இன்னும் மாறவில்லை தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மின்சார கட்டணம், வீட்டு வரி, அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம், குற்றங்கள் அதிகரித்திருப்பது, கட்டப்பஞ்சாயத்து குறையவில்லை, அத்தோடு பணத்தினால் இடைத்தேர்தலில் வென்று விடலாம் என்றும் எண்ணுகிறார்கள். 

இளங்கோவன்

பாஜக தேசிய தலைவர் நட்டா அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க நாங்கள் ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் ஒன்றிணைக்க கேட்டுக்கொண்டோம் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம், உறுதியான ஒற்றுமையான கூட்டணி இருந்தால் மட்டுமே அவர்களை வெல்ல முடியும் என்பதை அறிவுறுத்தினோம் அவர்களும் கேட்டுக் கொண்டார்கள் அவர்கள் இணைவார்கள் என நம்புகின்றோம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி 7ம் தேதி வரை இருக்கிறது.

சசிகலா அண்ணாமலை

தமிழக மக்கள் தீய சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள் ஆகவே நாங்கள் பொறுத்திருக்கிறோம் என்றார் சி.டி.ரவி. ஆகவே பாஜக ஜகா வாங்கிவிட்டது என்றே தெரிகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி, தேமுதிகவைத் தொடர்ந்து இன்று திமுக கூட்டணி வேட்பாளர் EVKS இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். ஈபிஎஸ் அணி வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதிமுக இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்தனியாக களமிறங்குவார்களா என்பது அதை ஆள்பவருக்கே வெளிச்சம் சாரி சாரி ஆண்டவனுக்கே வெளிச்சம். நான்குமுனைப்போட்டியா இல்லை ஆறு முனைப்போட்டியா என்பதை அறிய வரும் ஏழாம் தேதி வரை காத்திருக்க வேண்டியது தான்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வர அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியால் மட்டுமே முடியும் என தனி ஆவர்தனத்துக்கு தயாராகி வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web