நெகிழ்ச்சி வீடியோ... உண்மை காதல்... பெற்றோர் நிச்சயித்த அரசு பள்ளி ஆசிரியரை மறுத்து காதலனை கரம் பிடித்த இளம்பெண் !

ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் வசித்து வருபவர் ரேனு என்ற இளம் பெண் . இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த்துடன் பழக்கம் காதலாக மாறியது.
garment shop पर काम करने वाले के लिए govt टीचर को छोड़ रचा रही है शादी ।
— Shakti chaudhary Jaipur (@SKT_Chaudhary) April 9, 2025
मामला गंगापुर सिटी का । pic.twitter.com/1QbbgWi7sE
இவர்கள் இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்து நிலையில் ரேனுவின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். அதன்படி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரேனுவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறி தன் காதலனை டெல்லியில் திருமணம் செய்து கொண்டார். நிலையில் தற்போது இவர்கள் கொடுத்த ஒரு நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் தங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். அந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி ஒருவர் “அரசாங்க வேலை வாய்ப்பை விட்டு விட்டு ஒரு ஆடம்பரமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளார்” என்று கூறினார். இன்னொருவர் “அரசு ஆசிரியருடன் திருமணம் செய்து இருந்தால் கோல்ட் டிக்கர்” என்று சொல்லி இருக்கலாம் என பதிவிட்டுள்ளார். மேலும் இவர்களுடைய காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் உண்மை காதல் என்று கூறி வருகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!