புதிய வாக்காளர்களுக்கு 15 நாட்களில் வாக்காளர் அட்டை - தேர்தல் ஆணையம் அதிரடி

 
வாக்காளர் அடையாள அட்டை

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பித்த தகுதியுள்ள நபர்களுக்கு, விண்ணப்பம் ஏற்கப்பட்ட 15 நாட்களுக்குள் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை (EPIC) வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை

சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு என மொத்தம் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் உட்பட சுமார் 16 லட்சம் பேர் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் தற்போது வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதில் அங்கீகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக வாக்காளர் அடையாள அட்டை எண் ஒதுக்கப்படும்.

புதிதாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமின்றி, முகவரி மாற்றம் அல்லது பெயர்திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் புதிய அட்டைகள் தபால் மூலம் அவர்கள் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். அசல் அட்டை வீடு வந்து சேரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. விண்ணப்பம் ஏற்கப்பட்டு வாக்காளர் எண் ஒதுக்கப்பட்டவுடன், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்களது e-EPIC கார்டை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுவும் அசல் அட்டைக்கு நிகரான செல்லுபடியாகும் ஆவணமாகும்.

போலி வாக்காளர் அட்டை

வாக்காளர் அடையாள அட்டை கையில் இல்லாவிட்டாலும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற 12 அடையாள ஆவணங்களை (ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்றவை) காண்பித்து நீங்கள் வாக்களிக்க முடியும் எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும். அதில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!