களை கட்டும் தேர்தல் திருவிழா... நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 
எடப்பாடி ஆர்ப்பாட்டம் அதிமுக

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கி இருக்கும் நிலையில், நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களை திரட்டவும் தொடர்ந்து மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது.  

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நாளை ஜூன் 24  மற்றும் ஜூலை 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக  அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கழக வளர்ச்சி பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பூத் கமிட்டி அமைப்பு, கட்சி வளர்ச்சி, மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான “எம்.ஜி.ஆர். மாளிகையில்”நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது