5 மாநில தேர்தல்... அதிகாரிகளுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி… !

 
election

 

எதிர்வரும் சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி புதுடெல்லியில் 2 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 1,444 அதிகாரிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். தேர்தல் பணிகளை சீராகவும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கான வழிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டன.

வாக்காளர் தேர்தல் வாக்குப்பதிவு

இந்த பயிற்சியில் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் நடைமுறை, செலவின கண்காணிப்பு, தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஊடக தொடர்பு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகளில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

வாக்காளர்கள் தேர்தல் ஆணையம்

பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது பார்வையாளர்களின் முக்கிய பொறுப்பு என்றும் வலியுறுத்தப்பட்டது. வரும் தேர்தல்களை முன்னிட்டு இந்த பயிற்சி முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!