தமிழகத்தில் ஏப்ரல் 2 வது வாரத்தில் தேர்தல் … பாஜக தேசிய செயலர் சூசகம்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியபோது, தேர்தல் நடைபெற இன்னும் சுமார் 65 நாட்கள் மட்டுமே இருப்பதாக கூறினார். முதல்கட்டமாகவே தமிழகத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் குறிப்பிட்டார். மேலும், பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால் கடும் போட்டி நிலவும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தேர்தலை முன்னிட்டு கட்சித் தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
