ஏப்ரல் 15 க்குள் தமிழகத்தில் தேர்தல்... பாஜக கூட்டத்தில் கசிந்த தகவல்!

 
தேர்தல் தேர்தல்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 வரை தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும், அதுவரை மற்ற வேலைகளை பார்க்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவுரை கட்சித் தொண்டர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

தேர்தல் வேட்புமனு தாக்கல்

சென்னையில் இன்று நடைபெற்ற வெளிமாநில பார்வையாளர்கள் கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார். தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு பகுதிகளிலும் கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 15க்கு முன் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!