இன்று தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு? ... எகிறும் எதிர்பார்ப்பு!
இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி மற்றும் கேரளம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு கூட்டங்கள் மார்ச் 10ம் தேதியுடன் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

பொதுவாக தேர்தல் ஆய்வு பணிகள் முடிந்த ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நடைமுறை உள்ளது. அதனால் இன்று (மார்ச் 12) தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
