5 மாநில தேர்தல் ... 1,111 பார்வையாளர்கள் நியமனம்... தேர்தல் ஆணையம் நாளை முதல் அதிரடி கண்காணிப்பு!

 
தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம்

தமிழகம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 327 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 151 செலவினப் பார்வையாளர்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் நாளை (மார்ச் 18) முதல் தமிழகம் முழுவதும் முகாமிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், தேர்தல் செலவினங்களையும் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.

வாக்குப்பதிவு தேதிகள்:

தமிழகம்: ஏப்ரல் 23 (ஒரே கட்டமாக)

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம்: ஏப்ரல் 9 (ஒரே கட்டமாக)

மேற்கு வங்கம்: ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 (இரண்டு கட்டங்களாக)

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆங்காங்கே பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள 1,111 பார்வையாளர்களும் 5 மாநிலங்களில் உள்ள மொத்தம் 832 தொகுதிகளிலும் பணிகளை ஒருங்கிணைப்பார்கள். முறைகேடுகளைத் தடுக்கவும், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தவிர்க்கவும் இந்தப் பார்வையாளர்களின் கண்காணிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!