களத்தில் குதிக்கும் நட்சத்திரப் பட்டாளம்: 262 பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ‘க்ரீன் சிக்னல்’!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தரப்பு நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்து வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரும், மற்ற கட்சிகள் 20 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பெறலாம். இவர்களின் பிரசாரச் செலவுகள் வேட்பாளர் கணக்கில் சேராது என்பதால், கட்சிகள் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், சாட்டை துரைமுருகன் உட்பட 40 பேரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, முத்தரசன் உட்பட 40 பேரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 16 பேரும் களமிறங்குகின்றனர். சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் 20 பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 262 பேரை நட்சத்திரப் பேச்சாளர்களாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்னும் பல கட்சிகள் தங்கள் பட்டியலைத் தயார் செய்து வருவதால், வரும் நாட்களில் இந்தப் பட்டியல் மேலும் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசார மேடைகளில் இனி அனல் பறக்கும் பேச்சுகளுக்குப் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதி.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
