தமிழகத்தில் மார்ச் 30 முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்... அர்ச்சனா பட்நாயக் !

 
வேட்பு மனு தாக்கல் வேட்பு மனு தாக்கல்


தமிழகச் சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதிகள் மற்றும் விதிமுறைகளைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, வரும் மார்ச் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யலாம். தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் ஏப்ரல் 6 (திங்கட்கிழமை) ஆகும்.

தேர்தல் வேட்புமனு தாக்கல்

விடுமுறை நாட்களில் 'நோ' மனுத் தாக்கல்!
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கியத் தகவலில், குறிப்பிட்ட சில நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது எனக் கூறப்பட்டுள்ளது. 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட நாட்களில் மனுத் தாக்கல் செய்ய முடியாது:

மார்ச் 31 (செவ்வாய்)

ஏப்ரல் 1 (புதன்)

ஏப்ரல் 3 (வெள்ளி)

ஏப்ரல் 5 (ஞாயிறு)

வேட்பு மனு தாக்கல்

தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில், பறக்கும் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு எனத் தமிழகமே அரசியல் திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த வேட்புமனு தாக்கல் அறிவிப்பு தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!