தேர்தல் திருவிழா ஸ்டார்ட் ... துண்டு, பேட்ஜ்கள், தொப்பி, சட்டைகள், சேலை, டி.சர்ட்டுகள், கிரீடம் களைகட்டும் கட்சிப் பொருட்கள் விற்பனை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, வேட்பாளர் பட்டியலுக்காகத் தொண்டர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கோவையில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் விற்பனை இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வர்ணங்கள் பொறித்த கொடிகள், பேட்ஜ்கள், டி-சர்ட்டுகள், தொப்பிகள் என ரகரகமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைப்பதால், கட்சிச் சின்னம் பொறித்த 'அரசியல் குடைகள்' மற்றும் விசிறிகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

"வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் வந்து ஆர்டர்களைக் குவித்து வருகின்றனர். இரவு நேரப் பிரச்சாரத்திற்காகக் கட்சிச் சின்னம் பொறித்த 'ஒளிரும் மின்விளக்குகள்' இந்த முறை புதிய வரவாகப் புகுந்துள்ளன. இதுதவிர கட்சி வர்ணம் தீட்டப்பட்ட சேலைகள், கிரீடங்கள், துண்டுகள் என அனைத்தையும் ஸ்டாக் வைத்துள்ளோம்," என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் அட்டவணை ஒரு பார்வை:
வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்: மார்ச் 30
மனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 6
மனுப் பரிசீலனை: ஏப்ரல் 7
வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9
தேர்தல் நாள்: ஏப்ரல் 23
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கோயம்புத்தூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இந்தத் தேர்தல் வியாபாரம் இன்னும் பல மடங்கு எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
