தேர்தல் பணியாளர்களுக்கு குட் நியூஸ்... ஊதியம் இருமடங்கு உயர்வு - தமிழக அரசு அதிரடி!

 
election election

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இரவு பகலாக 24 மணி நேரமும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய அறிவிப்பு களப்பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேர்தல்

புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதிய விவரங்களின்படி, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு (Presiding Officer) ரூ. 3,000-மும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு (Polling Officers) ரூ. 2,600-மும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்களுக்கு (Supervisors) ரூ. 1,500, உதவியாளர்களுக்கு ரூ. 1,400 மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) ரூ. 2,000 எனப் புதிய ஊதிய விகிதம் அமலுக்கு வந்துள்ளது.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

வெப்ப அலை மற்றும் கூடுதல் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் நாளில் தடையின்றிப் பணியாற்றுவதை உறுதி செய்யவும், பணியாளர்களின் நலனைக் காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், தேர்தல் பணியில் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!