சட்டசபை தேர்தல்.... புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை !

 
புதுச்சேரி புதுச்சேரி

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும்   ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதன்படி மார்ச் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து மார்ச் 24ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

தேர்தல்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்புப் பணிகள் மற்றும் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கும் பணிகளுக்காகப் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9ம் தேதி (வியாழக்கிழமை) பொது விடுமுறை தினமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!