நாளை முதல் கருத்துக்கணிப்புக்குத் தடை... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

 
election election

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை (09.04.2026) காலை 7:00 மணி முதல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6:30 மணி வரை தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் அமையும் எந்தவொரு கணிப்பையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கறாராகத் தெரிவித்துள்ளது.

தேர்தல் வேட்புமனு தாக்கல்

இந்தத் தடை உத்தரவு அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகத் தொடங்கும் 'அமைதி காலத்தின்' போது, எலக்ட்ரானிக் ஊடகங்களில் எந்தவிதமான தேர்தல் ஆய்வு முடிவுகளையும் காண்பிக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தேர்தல்

அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்த பின்னரே, அந்தந்த மாநிலங்களின் வாக்குப்பதிவிற்குப் பிந்தையக் கணிப்புகளை வெளியிட அனுமதி அளிக்கப்படும். ஜனநாயக முறைப்படி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!