பிப்ரவரியில் தேர்தல்: திருச்சி சிவா, ஜி.கே.வாசன் உட்பட 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரலில் நிறைவு!
தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வாக, மாநிலத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ளது. தற்போது இந்தப் பதவிகளில் இருக்கும் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

கடந்த 2020 மார்ச் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்க்கண்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது: தி.மு.க. (4 பேர்): திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி (2 பேர்): தம்பிதுரை (அ.தி.மு.க.) மற்றும் ஜி.கே. வாசன் (த.மா.கா. தலைவர்).

இந்தப் பதவிகளை நிரப்புவதற்காக, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் 6 இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது.
தற்போதைய சட்டமன்ற பலத்தின் அடிப்படையில், காலியாகும் 6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
