EV வண்டி வாங்குபவர்களுக்கு இன்னும் 2 வருஷம் சலுகை நீட்டிப்பு... மத்திய அரசு அதிரடி !

 
ev ev


இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் புரட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லத் துடிக்கும் மத்திய அரசு, மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரியர்களுக்கு ஒரு மெகா 'கிப்ட்' வழங்கத் தயாராகி வருகிறது. தற்போது அமலில் உள்ள ‘PM E-DRIVE’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியச் சலுகைகளை, வரும் மார்ச் 31, 2026-டன் முடித்துக் கொள்ளாமல், மேலும் நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் விலை சட்டென உயராமல், நுகர்வோருக்குத் தொடர்ந்து லாபகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ev

இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் ஒளிந்துள்ளது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.10,900 கோடி பட்ஜெட்டில், இருசக்கர (e-2W) மற்றும் மூன்று சக்கர (e-3W) வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் முழுமையாகச் செலவிடப்படாமல் எஞ்சியுள்ளது. அந்தப் பணத்தை அப்படியே மக்களுக்கே போய்ச் சேர்க்கும் வகையில், காலக்கெடுவை நீட்டிக்கக் கனரகத் தொழில்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரியுள்ளது.

எலக்ட்ரிக் கார்

முதலில் 2026-ல் முடியவிருந்த இந்தச் சிறப்பு மானியத் திட்டத்தை, ஒட்டுமொத்தத் திட்டக் காலமான மார்ச் 31, 2028 வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய 'பூஸ்ட்' கிடைக்கும். பெட்ரோல் விலை உயர்வால் தவிக்கும் சாமானிய மக்கள், இந்த மானியச் சலுகையைப் பயன்படுத்தி அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற இது ஒரு பொற்கால வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!