"ரோட்டுக்கு நடுவுல மின் கம்பம்?"... உயிரைக் கையில் பிடித்து ஓடும் வாகன ஓட்டிகள்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலைக்கு நடுவே மின்கம்பம் ஒன்று ஆஜானுபாகுவாக நின்றுகொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. "என்னப்பா ரோடு போடுறீங்க?" என நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்த நிலையில், இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம்.. உடனடியாக அகற்ற கோரி பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை#uttarpradesh #road #electricpole #thanthitv pic.twitter.com/MaIKNO5BY6
— Thanthi TV (@ThanthiTV) March 25, 2026
லக்னோ அருகே அமைந்துள்ள இந்தச் சாலையில், வாகனங்கள் அதிவேகமாக வரும்போது திடீரென சாலையின் நடுவே நிற்கும் இந்த மின்கம்பத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பனிமூட்டம் அல்லது போதிய வெளிச்சம் இல்லாதபோது, இந்த மின்கம்பத்தில் மோதி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் குளறுபடி குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் லக்னோ பிராந்திய அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "மின்கம்பத்தை அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுவதற்குத் தேவையான நிலம் உடனடியாகக் கிடைக்கவில்லை. அதனால்தான் சாலை விரிவாக்கப் பணிகளின் போது மின்கம்பத்தை அப்படியே விட்டுவிட்டுச் சாலை போட வேண்டிய சூழல் ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், நிலம் கிடைத்தவுடன் அடுத்த 24 மணிநேரத்தில் மின்கம்பம் அப்புறப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதுவரை அந்த இடத்தில் எச்சரிக்கைப் பலகைகள் அல்லது பிரதிபலிப்பான்கள் வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அதிகாரிகள் இன்னும் பதிலளிக்கவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
