பயணிகள் கனிவான கவனத்திற்கு... மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பொதுப்போக்குவரத்து சேவையில் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சென்னை சென்ட்ரல் கூடூர் வழித்தடத்தில் அமைந்துள்ள பொன்னேரி கவரப்பட்டு ரயில் நிலையம் இடையே நாளை மார்ச் 27 மற்றும் 29 தேதிகளில் பிற்பகல் 12 முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40, காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30, காலை 11.35, பிற்பகல் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 1.00, பிற்பகல் 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 12.35, பிற்பகல் 1.15, பிற்பகல் 3.10 நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், சூலூர்பேட்டை - நெல்லூருக்கு காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு பிற்பகல் 12.40, பிற்பகல் 2.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.30, 3.15, மாலை 4.30 நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 27, 29 தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!