பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!
சென்னையில் இன்று (20 பெப்ரவரி 2026) முதல் 44 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை இவ்வாறு மாற்றப்பட்டு இயக்கப்படும். இது எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக புறநகர் ரயில் சேவை மாற்றப்பட்டதால் ஏற்பட்டுள்ளது.
இது காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் மின்சார ரெயில்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த மாற்றத்தால் வேலைக்கு செல்லும் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ரயில்வே மற்றும் போக்குவரத்து கழகம் தேவையான உதவி நடவடிக்கைகளை எடுக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
