2வது நாளாக மின்சார ரயில் சேவை பாதிப்பு... சிக்னல் கோளாறால் பயணிகள் கடும் அவதி!
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை 2வது நாளாக பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். எழும்பூர் ரயில் நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக நடைமேடை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிக்னல் கோளாறும் ஏற்பட்டது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

வழக்கமாக தினமும் 204 முறை இயக்கப்படும் ரயில்கள், தற்போது 164 முறை மட்டுமே இயக்கப்படுகின்றன. 10, 11வது நடைமேடைக்கு பதிலாக 5, 6வது நடைமேடைகளில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்துக்கு செல்வோர் சிரமத்துக்கு உள்ளாகினர். சில இடங்களில் ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் எதிரெதிராக நின்றதால் குழப்பமும் ஏற்பட்டது.

ஏப்ரல் 5ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த ரயில்வே துறை, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகவே இந்த பணிகள் நடைபெறுகின்றன என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
