மார்ச் 7 முதல் பரங்கிமலை, கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை !

 
மின்சார ரயில்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளால் பயணிகள் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதை சமாளிக்க ரெயில்வே நிர்வாகத்துடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு, சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் ‘ஷட்டில்’ மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தினசரி பயணிகள் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார ரயில்

இன்று முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களுக்கு கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து, 15 பெட்டிகள் கொண்ட ரயில்கள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பரங்கிமலை–சென்னை கடற்கரை இடையிலான பறக்கும் ரயில் பாதையில் வருகிற 5-ஆம் தேதி பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொள்கிறார்.

மின்சார ரயில்

அதனைத் தொடர்ந்து 7-ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழும்பூர் நிலையத்தின் 10-வது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!