வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை வெற்றி!
இந்திய ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க், வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் அதிவேக மின்சார ரயில் மூலம் சோதனை ஓட்டம் மேற்கொண்டார். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாதையை பரங்கிமலை வரை 5 கிலோமீட்டர் நீட்டிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதற்கு முன் சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அதன் அறிக்கைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களும் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆய்வின் ஒரு பகுதியாக பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை மோட்டார் டிராலி மூலம் பாதை, தண்டவாள அமைப்பு, மின்சார வழித்தடம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.

பின்னர் 9 பெட்டிகள் கொண்ட குளிர்சாதன மின்சார ரயிலில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட புதிய நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. மார்ச் 10 முதல் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
