மழைநீரில் மின்கசிவு... ஒருவர் மின்சாரம் தாக்கி பலி!
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. இதனால் பல்வேறு தெருக்கள், வீதி சந்துகள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி, குளங்களைப் போன்ற நிலை ஏற்பட்டது. சில பகுதிகளில் தண்ணீர் மெதுவாக வடிந்தபோதிலும், பெரும்பாலான இடங்களில் நீர் இன்னும் தேங்கி இருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி நால்வர் நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ஸ்பின்னிங் மில் தொழிலாளி பழனியாண்டி, வீட்டு தேவைகளுக்காக அருகிலுள்ள கடைக்குச் சென்றார். அப்போது அவர் மழைநீர் தேங்கி இருந்த சாலையில் நடந்து சென்றார்.

அந்த பகுதியில் தேங்கியிருந்த நீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், அதில் கால்நூறி சென்ற பழனியாண்டி மீது மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவத்தையடுத்து மின்வாரிய பணியாளர்கள் அங்கு சென்று, மின்கசிவு ஏற்படாத வகையில் மின்கம்பிகள் மற்றும் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
