தமிழக அரசியலில் பரபரப்பு... மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!

தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் எம்.சி சங்கர். இவர் கரூரில் அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கரூரில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னையிலும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!