யானைகள் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

 
யானை
 

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ பகுதியில் யானைகள் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மகுவாடான்ர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பர்கிபுன்னு கிராமத்தில் நடந்தது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

யானைகள்

உணவை தேடி யானைகள் கூட்டம் கிராமத்துக்குள் நுழைந்தது. அப்போது அங்கிருந்த ஒரு வீட்டை யானைகள் தாக்கியது. தாக்குதலில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. யானைகள் தாக்குதலிலிருந்து தப்பிக்க முயன்றபோது, வீட்டிற்கு வெளியே இருந்த யானைகள் மூவரையும் மிதித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இந்த யானைகள் கூட்டம் கடந்த சில நாட்களாக பர்கிபுன்னு பகுதியில் சுற்றித் திரிந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்திற்குப் பிறகு வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!