யானை அட்டகாசம்… 2 இடங்களில் 6 பேர் பலி!

 
யானை
 

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் யானை தாக்கியதில் 2 வேறு இடங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நோவாமுண்டி மற்றும் ஹத்கமரையா பகுதிகளில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை

இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த யானை மனிதர்களை தொடர்ந்து தாக்கி வந்ததாக சாய்பாசா மண்டல வன அதிகாரி ஆதித்ய நாராயண் கூறினார். இதற்கு முன்தினம் கூட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேரை யானை தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது.

யானை

இந்த பகுதிகளில் யானைகள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சில ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. யானையை கண்காணித்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!