ஏர்டெல் உடன் கைகோர்த்த எலான் மஸ்க்!

இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையைப் பெறுவதற்காக ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்திய தொழிலதிபரான சுனில் பார்தி மிட்டலுக்குச் சொந்தமான ஏர்டெல் நிறுவனம், நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக அமெரிக்கத் தொழிலதிபரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயற்கைக்கோள் மூலம் நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் அனுமதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. இதனால் இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மையம் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒப்புதலுக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது. எலுசாட் ஒன்வெப் நிறுவனத்தின் மூலம் இணைய சேவைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த இணைய சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தொலைதூர கிராமங்கள், அங்குள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனை மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையையும் ஏர்டெல் பயன்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!