ஹா ஹா வாவ்... கை, கால்களில் விலங்குடன் விமானத்தில் ஏறுபவர்கள்... எலான் மஸ்க்கிற்கு குவியும் கண்டனங்கள்!
அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை விலங்குடன் நாடு கடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்அந்த வகையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 3 அமெரிக்க ராணுவத்தின் விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்ட 332 இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.
ASMR: Illegal Alien Deportation Flight 🔊 pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அனைவரின் கை மற்றும் கால்களை விலங்கால் கட்டிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தியர்களை ஏலியன் எனக் குறிப்பிட்டு, கை, கால்களில் விலங்கிடப்பட்டிருக்கும் வீடியோவை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்த 40 மணி நேரத்துக்கும் மேலாக தங்களின் கை, கால்கள் விலங்குகளால் கட்டப்பட்டிருந்ததாகவும், உணவு சாப்பிடகூட கை விலங்குகள் அகற்றப்படவில்லை எனவும் இந்தியா வந்தடைந்தோர் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில், கை, கால்களில் விலங்குகளால் கட்டப்பட்டு நாடு கடத்தப்படும் புதிய வீடியோ ஒன்றை, ஏலியன் எனக் குறிப்பிட்டு வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த எலான் மஸ்க், 'ஹாஹா வாவ்' என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
