நான் ஒரு சுவிட்ச தட்டினா உக்ரைன் சுருண்டு விழும்... எலான் மஸ்க் எச்சரிக்கை!

 
எலான் மஸ்க்


 பிரபல சமூக வலைதளமான எக்ஸ்  தளம் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி முதல்  தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் இயங்கு முறையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. இதனால் எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் கடும்அவதிக்குள்ளாகினர்.
 நேற்று எக்ஸ் தளத்திற்கு ஏற்பட்ட சைபர் தாக்குதலானது DDoS எனும் வகையை சார்ந்தது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.  இந்த DDoS (Distributed Denial-of-Service) சைபர் அட்டாக் என்பது “சேவை மறுப்பு” சைபர் தாக்குதலாக வகைப்படுத்தப்படுகிறது. அதாவது பயனர்கள் இந்த தளத்தை அணுகமுடியாத அளவுக்கு சைபர் குற்றவாளிகள் அந்த குறிப்பிட்ட தளத்திற்கு அதிகப்படியான டிராபிக்-களை  செயல்படுத்துவர். இதன் மூலம் பயனர்கள் அந்த தளத்தை அணுகவே முடியாது.

எலான் மஸ்க்
இந்த DDoS வகை சைபர் அட்டாக் என்பது பெரும்பாலும் நிதி நிறுவனங்கள், வங்கி சேவை, பணம் செலுத்தும் இணையதளங்களையே அதிகம் பாதித்துள்ளது. இந்த முறை இவ்வகை சைபர் அட்டாக் எக்ஸ் தளத்தை குறிவைத்துள்ளது. எக்ஸ் தளத்தில் சைபர் தாக்குதலை அடுத்து, பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்ட பயனர்கள் தாங்கள் சந்தித்த பிரச்சனை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். மேலும்,  டவுன்டெக்டரில் (downdetector) எக்ஸ் தளம் சைபர் அட்டாக் குறித்து சுமார் 40,000 க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.
இது குறித்து எக்ஸ் தளத்தின்  தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ” நாங்கள் ஒவ்வொரு நாளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிறோம். ஆனால், தற்போதைய தாக்குதல் மிகப்பெரியது. இது ஒரு பெரிய, ஒருங்கிணைந்த குழு அல்லது ஒரு நாடே இதன் பின்னால் ஈடுபட்டிருக்கலாம். அதுபற்றிய ஆய்வை தொடர்ந்து வருகிறோம் என பதிவிட்டு இருந்தார்.
அதனை அடுத்து, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மஸ்க் அளித்த பேட்டியில், இந்த சைபர் அட்டாக் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஹேக்கர்கள் பயன்படுத்திய IP முகவரிகள் உக்ரைன் பகுதியில் இருந்து இயக்கப்பட்டதாக தெரிகிறது என உறுதிப்படுத்தப்படாத குற்றசாட்டை முன்வைத்தார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் தொழில்முறை ஆய்வு கல்லூரியில் உள்ள துணை பேராசிரியர் நிக்கோலஸ் ரீஸ் தனியார் செய்தி நிறுவனத்திடம்  இந்த குறுகிய கால எக்ஸ் தள செயலிழப்புகளை கருத்தில் கொண்டு, மஸ்க் அந்த நபர் (உக்ரைன் அதிபர்) மீது குற்றம் சாட்டுவது அர்த்தமுள்ளதாக இல்லை எனக் கூறியிருந்தார்.  

எலான் மஸ்க்
மேலும், சைபர் தாக்குதலில் இரண்டு வகை உள்ளன. ஒன்று சைபர் குற்றம் அனைவருக்கும் தெரியும்படி செய்வது, இன்னொன்று அந்த தளம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என செய்பவை. பொதுவாக மிகவும் பேசப்படுவது அந்த தளத்தை அமைதியானவையாக மாற்றும் சைபர் அட்டாக் தான்.  இது கிட்டத்தட்ட உக்ரைன் மீதான சந்தேகத்தை முழுவதுமாக  நீக்குகிறது.  அதிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் பலன் என்பது மிகமிகக் குறைவு என நிக்கோலஸ் ரீஸ் தெரிவித்துள்ளார்.  
 
பாலஸ்தீனிய சார்பு சைபர்ஹேக்கிங் குழுவான Dark Storm  எனும் அமைப்பு நேற்று மார்ச் 10ம் தேதி எக்ஸ் தளத்தில் சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக பொறுப்பை ஏற்றுக்கொண்டது என நியூஸ் வீக் தளத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. Dark Storm குழுவானது டெலிகிராம் செயலியில் இதனை பெருமையாகக் கூறி, அதற்கு ஆதரவாக சில ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web