எலான் மஸ்க் நிறுவனத்தில் இந்தியருக்கு வாய்ப்பு… ஐஐடி மாணவர் தேர்வு!

 
எலான் மஸ்க் எலான் மஸ்க்

 

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் பணியாற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவேந்திர சிங் சாப்லட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘சூப்பர் இன்டெலிஜன்ஸ்’ குழுவில் அவர் பணியாற்ற உள்ளார். எலான் மஸ்க் நேரடி பார்வையில் இந்தப் பொறுப்பை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர சிங் சாப்லட் 2010ஆம் ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 25வது இடம் பெற்றவர். மேலும் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியிலும் சிறந்த நிலை பெற்றுள்ளார். பின்னர் மும்பை ஐஐடியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை முடித்து, அமெரிக்காவில் உள்ள கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கற்றல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

இதற்கு முன்பு சமூக வலைதள நிறுவனம் மெட்டாவின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். மேலும் தென் கொரியாவின் சாம்சங் நிறுவனத்திலும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவும் நிலையில், இந்தத் தேர்வு இந்தியர்களுக்கு பெருமை அளிப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!