எலோன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ கார் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.. மும்பையில் முதல் ஷோரூம்... ஏப்ரலில் தொடக்கம்!

 
டெஸ்லா

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ கார் தொழிற்சாலை இந்தியாவில் துவங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. வருகிற ஏப்ரல் மாதத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது முதல் விற்பனை மையத்தை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது 2வது கார் ஷோரூமைத் திறக்க டெஸ்லா  நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெஸ்லா

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான தொழிலதிபர் எலான் மஸ்க்கின் முதல் ஷோ ரூம், மும்பையில் வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்டதையடுத்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கிறது.

இந்த கார் ஷோரூம் திறப்பதற்காக மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தின் தரை தளத்தில் 4,000 சதுர அடி கொண்ட இடத்தை டெஸ்லா நிறுவனம் வாடகைக்கு பெற்றுள்ளதாகவும், இந்த ஷோரூமுக்கு மாத வாடகையாக சுமார் ரூ.35 லட்சம் கொடுக்கவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க் மோடி

அதே போன்று மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது 2 வது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. மும்பையில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா திறப்பது உறுதியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் எலோன் மஸ்க் சந்தித்த அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, டெஸ்லா இந்திய நகரங்களான மும்பை மற்றும் டெல்லியில் அடுத்தடுத்து இரண்டு ஷோரூம்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web