எலான் மஸ்கின் எக்ஸ் (X) தளத்துக்கு ₹1,259 கோடி அபராதம் விதிப்பு!
சமூக வலைத்தளங்களுக்கான ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் விதித்த புதிய பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை விதிமுறைகளுக்கு இணங்காததால், எலான் மஸ்கின் எக்ஸ் (X) வலைத்தளத்துக்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ₹1,259 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களுக்கான புதிய சட்ட விதிமுறைகளை அறிமுகம் செய்தது. ஆனால், அப்போதிருந்தே உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எலான் மஸ்கின் எக்ஸ் தளம், அந்தப் புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று அபராதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடான ஏமாற்றும் வடிவமைப்புகள் (Deceptive Designs) எக்ஸ் தளத்தில் இருப்பது, மற்றும் ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளை வழங்க மறுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க மறுத்த காரணத்தினால் எக்ஸ் (X) வலைத்தளம் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
