இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

 
இஸ்ரேல்

இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அங்கு உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஹோம் ப்ரண்ட் கமாண்ட் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தற்போது தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சூழ்நிலை சீராகும் வரை பயணத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பாதுகாப்பே முதன்மை என தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்திய தூதரகத்தின் 24 மணி நேர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. +972-54-7520711, +972-54-3278392 என்ற தொலைபேசி எண்களும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!