1000 ஆண்டு பழமையான கோவிலில் பலகோடி மரகத லிங்கம் கொள்ளை!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோவிலை பராமரித்து வரும் கலியபெருமாள், வழக்கம்போல் கருவறையை பூட்டி சாவியை தலையணை கீழ் வைத்து உறங்கினார். அதிகாலை கோவில் திறக்க எழுந்தபோது சாவி மாயமானதை கண்டு பதறினார். உள்ளே சென்று பார்த்தபோது கருவறை பூட்டு திறந்து, மரகத லிங்கம் காணாமல் போனது.
உடனே ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு, மோப்பநாய் சோதனை, கைரேகை பதிவு உள்ளிட்ட தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்றதோடு யாரையும் பிடிக்கவில்லை. மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர்.
அரைஅடி உயரம் கொண்ட பழமையான மரகத லிங்கத்தின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளை கடந்த அரிய மரகத லிங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
