அவசர எச்சரிக்கை... செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!
'டிட்வா' புயல் தற்போது இலங்கை நிலப்பரப்பிலிருந்து விலகி, டெல்டா மற்றும் வட இலங்கைக் கடல் பகுதிகளை அடைந்து, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களை நோக்கி மிகத் தீவிரமாக நகர்ந்து வருகிறது. இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) பிற்பகலுக்குப் பிறகு புயல் சென்னை கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளிலிருந்து உபரி நீர் திறப்பு அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஏரிகளில் வரும் நீரின் அளவைச் சமன் செய்யவும், பாதுகாப்புக் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி: இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, ஏற்கெனவே 1200 கன அடியாக இருந்த நிலையில், அது தற்போது 2000 கன அடியாக அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரி: புழல் ஏரியிலிருந்தும் நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 1200 கன அடி உபரி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரி: பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 2500 கன அடியாக இருந்த உபரி நீர் திறப்பு, தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டு 3000 கன அடியாக வெளியேற்றப்படுகிறது.

பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
ஒரே நேரத்தில் சென்னையின் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஏரிகளின் நீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் தண்ணீர் வரத்து கடுமையாக உயரும்.
எனவே, இந்த உபரி நீர் செல்லும் பாதைகள் மற்றும் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
