இமானுவேல் சேகரன் மணிமண்டபம்.. ஆளுயர சிலையைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

 
இமானுவேல் சேகரன்

தியாகி இமானுவேல் சேகரனின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மணிமண்டபம் இன்று மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. முன்னதாக பரமக்குடி வந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பரமக்குடி சந்தைத் திடல் அருகே சுமார் 50 சென்ட் பரப்பளவில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தின் முகப்பில் இமானுவேல் சேகரனின் கம்பீரமான முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். சுமார் ரூ. 3 கோடி செலவில் இந்த நினைவகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன்

கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் இமானுவேல் சேகரனின் சமூகப் பங்களிப்பைப் போற்றும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகப் பணிகள் நிறைவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் மணிமண்டபத்தைப் பார்வையிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!