பரமக்குடியில் இமானுவேல் சேகரன் அரங்கம்! நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

 
ஸ்டாலின் முதல்வர்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், இந்திய சுதந்திரத்திற்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் பரமக்குடியில் பிரம்மாண்ட அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நாளை  நண்பகல் 12 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் மற்றும் திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

இமானுவேல் சேகரன்

முதல்வர் திறந்து வைக்கவுள்ள இந்த அரங்கில் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.  சுதந்திரப் 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். 1945-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்குச் சேவையாற்றினார்.

தியாகி இமானுவேல் சேகரன்

1950ல் "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" தொடங்கி, தீண்டாமை மற்றும் இரட்டை குவளை முறைக்கு எதிராகக் கடும் போராட்டங்களை முன்னெடுத்தார். இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு நினைவரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த அரங்கம் தற்போது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!