எமி விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்!!

 
ராபர்ட்

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பிளேக் காலமானார். இவர் எமி விருது பெற்றவர்.  1930 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து 1990 இறுதிவரை  எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 70களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற  பரோடா தொடரில் நடித்து எம்மி விருதையும் வென்றவர்.

ராபர்ட்

இவர் 2001 ல் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்ததாக  இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 89. இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  மனைவியின் மறைவிற்கு பிறகு அவருக்கு வாய்ப்புக்கள் வெகுவாக குறையத் தொடங்கின. இது அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது. 1933  ல்  அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பிறந்த ராபர்ட் பிளேக் மிக சின்னஞ்சிறு அதாவது 2 வயது முதலே நடிக்க தொடங்கினார்.

rip

அவருடன் பிறந்த மற்ற 2 பேரும்  நடிகராக வேண்டும் என அதற்காக பல முன்னேற்பாடுகளை செய்தார்.  ஒரு இளைஞனாக, ராபர்ட் பிளேக் எங்கள் கேங் நகைச்சுவைகளில் நடித்தார் மற்றும் தி ட்ரெஷர் ஆஃப் தி சியரா மாட்ரேவில் நடித்தார். டர்மன் கபோட்டின் திரைப்படத்தில் பெர்ரி ஸ்மித் என்ற நிஜ வாழ்க்கை கொலைகாரனாக நடித்ததற்காக அவர் பலரது பாராட்டைப் பெற்றார்.இவருடைய மறைவிற்கு பிரபலங்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web