இந்தியாவில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. காக்னிசன்ட் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் காக்னிசன்ட், இந்நிறுவனம் இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் , ``கடந்த இரு ஆண்டுகளில் சேவைத் திட்டங்கள் அதிகரித்ததால், வலுவான தொழிலாளர் கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம். பல புதிய பட்டதாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாகப் பணியமர்த்துதல், செயல் நுண்ணறிவு மூலம் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதில்தான், நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
இந்நிலையில், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, 20,000 பணியாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இது, கடந்தாண்டைவிட இரு மடங்கு அதிகமாகும்'' எனக் கூறியுள்ளார். 2025ம் ஆண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் மட்டும் 5.1 பில்லியன் டாலருடன் ஆண்டுக்கு 7.45 சதவிகித வளர்ச்சியடைந்ததாக அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!