நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடக்கம்!
காலி மதுபாட்டில்களுக்கு பணம் திரும்ப… சென்னையில் டாஸ்மாக் புதிய திட்டம்
சென்னை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் டாஸ்மாக் லிட் சார்பில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. பொது இடங்களில் மதுபாட்டில்களை வீசுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மதுபானக் கடைகளிலேயே பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் மது வாங்கும் போது ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும். மது அருந்திய பின்னர், காலி பாட்டிலை அதே டாஸ்மாக் கடையில் ஒப்படைத்தால், முன்பே செலுத்திய ரூ.10 முழுமையாக திரும்ப வழங்கப்படும். இதனால் பாட்டில்களை வெளியே வீசாமல் கடைகளுக்கே திருப்பி கொடுக்க ஊக்கம் கிடைக்கும்.

காலி மதுபாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். சாலைகள், பொது இடங்கள் சுத்தமாக இருக்கவும் இந்த நடைமுறை உதவும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை முதல் சென்னையில் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
