என்கவுன்ட்டர்: போலீசாரை வெட்டிவிட்டுத் தப்ப முயன்ற ரவுடி அழகுராஜா சுட்டுக்கொலை!

 
என்கவுன்ட்டர் ரவுடி அழகுராஜா

பிரபல ரவுடி வெள்ளைக்காளியை வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த அழகுராஜா, இன்று காலை போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஜனவரி 24-ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி வெள்ளைக்காளியை வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் அழகுராஜாவைப் போலீசார் கைது செய்தனர். அழகுராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை வனப்பகுதிக்கு இன்று அதிகாலை போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.

வனப்பகுதிக்குள் சென்றபோது, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென உதவி ஆய்வாளர் சங்கரை அழகுராஜா வெட்டியுள்ளார். படுகாயமடைந்த உதவி ஆய்வாளரைக் காப்பாற்றவும், தப்பியோட முயன்ற அழகுராஜாவைத் தடுக்கவும் மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கி போலீசார் கொலை என்கவுன்ட்டர்

அழகுராஜாவின் தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சங்கர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரவுடி வெள்ளைக்காளிக்கும் அழகுராஜாவுக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை இருந்து வந்துள்ளது. இதன் பின்னணியில் பல கொலை முயற்சிகள் நடந்துள்ளன. கடந்த வாரம் நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவமே இந்த என்கவுன்ட்டருக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. உயிரிழந்த அழகுராஜா மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஒரு குறிப்பிட்ட கூலிப்படை கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, இந்த என்கவுன்ட்டர் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது. சம்பவ இடத்திற்குத் தடயவியல் நிபுணர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சட்டம் - ஒழுங்கு: தமிழகத்தில் சமீபகாலமாக ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த என்கவுன்ட்டர் ரவுடிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!